top of page

ராகி வீட்டு முறை இடியாப்பம்

Prep Time:

15 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

ராகியில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளதால், உடலுக்கு வலிமை தரும்,ரத்தச் சோகை வராமல் தடுக்கும்.
இரத்தசோகை மற்றும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த மருந்து. ராகி உடல் சூட்டைக் குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய ஒன்று.

Ingredients

  • 3 கப் ராகிமாவு

  • 3 கப் தண்ணீர்

  • 3 ஸ்பூன் தேங்காய்எண்ணெய்

  • 1 பின்ச் உப்பு

Preparation

  • முதலில் ஒரு பாத்திரத்தில் 1 பின்ச் உப்பு போட்டு 3 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.

  • பின் ஒரு பாத்திரத்தில் மாவை எடுத்துக் கொண்டு அதில் கொதிக்கும் தண்ணீர் விட்டு கரண்டியால் நன்கு கிளறிவிடவும். 3 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விடவும். மாவு ஒன்று போல் சப்பாத்திமாவை விட சற்று தளர்வாக இருக்க வேண்டும்.

  • இளம் சூடாக இருக்கும் போதே இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி பானையில் பிழிந்து மூடி போட்டு மூடவும்.

  • 10 நிமிடத்தில் இடியாப்பம் தயார்.

bottom of page