top of page

பனங்கருப்பட்டி கருப்பு உளுந்தங்களி

Prep Time:

5 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

இதயத்தை பாதுகாக்க தேவையான பொட்டாசியம் சத்து கருப்பட்டியில் உண்டு.
இவை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த அழுத்ததையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.

Ingredients

  • 1 கப் கருப்பு உளுந்து

  • 150 கிராம் பனங்கருப்பட்டி

  • 4 தேக்கரண்டி பச்சரிசி

  • 2 மேஜைக் கரண்டி நல்லெண்ணெய்

  • 2 கப் தண்ணீர்

Preparation

  • உளுந்தையும் அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

  • உளுந்தங்களி மாவை தோசைமாவு பதத்திற்கு தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் சுடு தண்ணீரை நன்றாக கொதிக்க வைக்கவும். அகன்ற வாணலியில் கரைத்து வைத்துள்ள உளுந்தங்களி மாவை ஊற்றி அரை மணி நேரம் அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்றாக கிளறி கொண்டே இருக்கவும். அவ்வப்போது சுடு தண்ணீரை சிறிது சிறிதாக சேர்த்து கிளற வேண்டும்.

  • இப்பொழுது பனங்கருப்பட்டி சிறிது நல்லெண்ணெய் சேர்த்து மீண்டும் நன்றாகக் கிளறவும். உளுந்தங்களி எண்ணெயுடன் சேர்த்து அல்வா பதத்துக்கு சுருண்டு வரும் போது இறக்கவும்.

  • உளுந்தங்களி வெந்த பிறகு ஒரு குழி கிண்ணத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி அதில் உளுந்தங்களியை போட்டு சூடாகப் பரிமாறலாம்.

bottom of page