top of page

திணை பிஸ்கட்

Prep Time:

20 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

தினை நார்ச்சத்து நிறைந்த ஒரு உணவாகும். இதை தினமும் ஒரு வேளை உணவாக சாப்பிட்டு வரும் போது மலச்சிக்கல் நீங்கும். வயிறு, குடல், கணையம் போன்ற உறுப்புகளை வலுப்படுத்தும். அவற்றில் இருக்கும் புண்களை ஆற்றும். குழந்தைகளுக்கு எளிதில் ஜீரணமாகும்.
நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் தினை உணவுகளை சாப்பிடுவதால் நீரிழிவு நோயால் இழந்த உடல் சக்தியை மீண்டும் பெற இயலும். மேலும் சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கும்.

Ingredients

  • 1/2 கப் திணை மாவு

  • 1/2 கப் கோதுமை மாவு

  • 1/4 கப் தேசிக்கேட்டர் கோக்கனட்

  • 1/2 கப்பொடித்தவெல்லம் (அ) நாட்டுச்சர்க்கரை

  • சிறிது ஏலக்காய்தூள்

  • 2 டேபிள்ஸ்பூன் முட்டை (அ) பால்

  • 2 டீஸ்பூன் வெண்ணெய்

Preparation

  • தினையை ஐந்து முறை நன்றாகக் கழுவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும் பிறகு தண்ணீரை முழுவதும் வடித்து துணியில் படர்ந்து காய வைக்கவும்

  • ஈரம் முழுவதும் போன பிறகு மிக்ஸியில் பொடியாக அரைத்து சலித்து காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். தேவைப்படும் பொழுது உபயோகித்துக் கொள்ளலாம்.

  • ஒரு பவுலில் மிருதுவான வெண்ணையை சேர்த்து நன்றாக 2 நிமிடம் கிளறவும் பிறகு வெல்லத்தை பொடி செய்து இதில் சேர்க்கவும். இப்போது வெல்லமும் வெண்ணையும் இரண்டும் ஒன்றோடு ஒன்று கலக்குமாறு 3 நிமிடம் கிளறவும்.

  • பிறகு இதில் முட்டை அல்லது பால் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று கலக்கவும். பிறகு இதில் திணைமாவு, கோதுமைமாவு சேர்க்கவும்.

  • தேசிக் கேட்டர் கோக்கனட் சேர்த்து அனைத்தையும் கலந்து சப்பாத்திமாவு பதத்தில் மிருதுவாக பிசையவும். இவை சற்று தளர்வாக அல்லது தண்ணீர் போலவும் இருப்பதாக தோன்றினால் இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் தினைமாவு அதே அளவு கோதுமைமாவு சேர்த்துப் பிசையவும். மிருதுவாகவும் கெட்டியாகவும் இருக்க வேண்டும்.

  • உருண்டையை எடுத்து உருட்டி தட்டையாக தட்டிக்கொள்ளவும் பிறகு இதனை தேசிக் கேட்டர் கோக்கனட் பிரட்டி எடுத்துக் கொள்ளவும்.

  • அகலமான பாத்திரத்தில் உப்பு அல்லது மணல் சேர்த்து 15 நிமிடம் பிரீஹிட் செய்யவும். ஒரு தட்டின் மேல் பட்டர் சீட்டு வைத்து தயாரித்து வைத்திருக்கும் பிஸ்கட்டை சற்று இடைவெளி விட்டு வைக்கவும். பிறகு இதனை 15-20 நிமிடம் மிதமான தீயில் வைக்கவும்.

  • இதே போல் அனைத்தையும் தயாரித்து கொள்ளவும்.

bottom of page