top of page

சோளம் பணியாரம்

Prep Time:

30 Minutes

Cook Time:

20 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

சோள உணவுகள் உடலுக்கு உறுதி அளிக்கவல்லவை. உடல் பருமனைக் குறைக்கும், வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும்.

Ingredients

  • 1/2 கப் வெள்ளைசோளம்

  • 1/2 கப் இட்லிஅரிசி

  • 1/4 கப் பச்சரிசி

  • 1/4 கப் உளுந்து

  • 1 டீஸ்பூன் வெந்தயம்

Preparation

  • ஒரு நாலு மணி நேரம் ஊற வைத்த வெள்ளை சோளம், அரிசியை தனியாக அரைத்து, வெந்தயம் உளுந்தை தனியாக இட்லிக்கு அரைப்பது போல் அரைத்து இரண்டையும்

    உப்பு போட்டு கலந்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.

  • சிறிது எண்ணெயில் கடுகு, உளுந்தப்பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், கருவேப்பிலை, சிறியவெங்காயம் போட்டு தாளித்து இதை மாவில் கலக்கவும்.

  • பின்னர் பணியாரக் கல்லை சூடாக்கி குழியில் துளி எண்ணெய் விட்டு மாவை எடுத்து பணியாரங்களாக ஊற்றவும். ஒரு பக்கம் சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கமும் வெந்ததும் எடுக்கவும்.

bottom of page