top of page

கம்பு பிஸ்கட்

Prep Time:

15 Minutes

Cook Time:

20 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

தோலிற்கும், கண்பார்வைக்கும் அவசியமான வைட்டமின் ஏ உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் அதிக அளவில் கம்பில் மட்டுமே உள்ளது.

அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது.

கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம்.

வளரும் குழந்தைகளுக்கும் , மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும்.

வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது.

இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம்.

உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும்.

கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.

இதயத்தை வலுவாக்கும்.

சிறுநீரைப் பெருக்கும்.

நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.

இரத்தத்தை சுத்தமாக்கும்.

உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.

நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.

தாதுவை விருத்தி செய்யும்.

இளநரையைப் போக்கும்.

Ingredients

  • கம்புமாவு - 1 கப்

  • பிரவுன்சர்க்கரை - 1/4 கப்

  • உருக்கிய வெண்ணெய் - 1/4 கப்

  • ஏலக்காய்தூள் - 1 தேக்கரண்டி

  • பேக்கிங்சோடா - 1/4 தேக்கரண்டி

  • உப்பு - 1/4 தேக்கரண்டி

  • வெதுவெதுப்பான பால் - 2 மேசைக்கரண்டி

  • உடைத்த பாதாம் பிஸ்தா முந்திரி - 2 மேசைக்கரண்டி

Preparation

  • அவணை 355 டிகிரி பாரென் ஹிட்க்கு முன்கூட்டியே சூடாக்கவும்.

  • பாத்திரத்தில் பாலை தவிர அனைத்து பொருள்களையும் சேர்த்து கலக்கவும்.

  • பாலை சிறிது சிறிதாக மாவில் சேர்த்து குக்கீஸ் மாவு பதத்திற்கு பிசையவும்.

  • குக்கீஸ் தட்டில் வெண்ணெய் அல்லது வெண்ணெய் பேப்பர் வைக்கவும்.

  • பிசைந்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வடைப் போல் தட்டி குக்கிஸ் தட்டில் வைத்து 355 டிகிரி பாரென் ஹிட்டில் 13-15 நிமிடங்கள் பேக் செய்யவும்.

bottom of page