top of page

கம்பு தோசை

Prep Time:

30 Minutes

Cook Time:

5 Minutes

Serves:

7 Servings

Level:

Beginner

About the Recipe

கம்பு நார்ச்சத்து மிகுந்த உணவு. இதில் கொழுப்பு குறைவாக உள்ளது.
இந்த கம்பங்கூழை குடித்து வந்தால் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை குறைய கூடும்.
உடல் எடையை குறைக்க விரும்பினால் தினசரி ஒரு வேளை கம்பு உள்ள உணவை எடுத்து கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

Ingredients

  • 2 கப் கம்பு

  • 1/4 கப் முழு வெள்ளை உளுந்து

  • உப்பு தேவையான அளவு

  • தண்ணீர் அரைப்பதற்கு

Preparation

  • கம்பு நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து குறைந்தது ஐந்து மணிநேரம் ஊற வைக்கவும். அரைப்பதற்கு ஒரு மணிநேரம் முன்பு உளுந்தை சேர்த்து ஊறவிடவும்.

  • பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நைசாக அரைக்கவும். அளவான தண்ணீர் சேர்க்கவும்.

  • அரைத்த மாவை ஒரு பாத்திரத்தில் சேர்த்து உப்பு கலந்து இரவு முழுதும் வைத்தால் நன்கு மாவு புளித்து விடும்.

  • காலையில் எடுத்து மாவை கரண்டியால் நன்கு கலந்து தோசை தவாவை சூடு செய்து தோசை வார்க்கவும்.

  • தோசை ஒரு பக்கம் வெந்தவுடன் திருப்பிப்போட்டு ஒரு நிமிடம் விட்டு எடுத்தால் கம்பு தோசை தயார்.

  • இப்போது சத்தான சுவையான கம்பு தோசையை உங்கள் விருப்படி சட்னி வைத்து சுவைக்கவும்.

bottom of page