top of page

இனிப்பு சோள காய்கறிகள் சூப்

Prep Time:

20 Minutes

Cook Time:

30 Minutes

Serves:

5 Servings

Level:

Advanced

About the Recipe

சோளம் வைட்டமின் பி 12, ஃபோலிக் அமிலம் மற்றும் இரும்புச் சத்து போன்றவை நிறைந்துள்ளது.
இது உடலில் ரத்த சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
உடலில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்வதன் மூலம் ரத்த சோகை வருவதற்கான அபாயத்தை குறைக்கிறது.

Ingredients

  • 150 கிராம் இனிப்பு சோளம்

  • 1 கேரட் பொடியாக நறுக்கியது

  • 150g பொடியாக நறுக்கிய பீன்ஸ்

  • 2 டேபிள்ஸ்பூன் கான்பிளவர்மாவு

  • 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள்

  • தேவையான அளவு உப்பு

  • தேவையான அளவு தண்ணீர்

Preparation

  • முதலில் இனிப்பு சோளத்தை கதிரிலிருந்து தனியாக உதிர்த்து எடுத்து அரைப்பதற்கு 3 ஸ்பூன் வேக வைக்காத இனிப்பு சோளம் தனியாக எடுத்து வைத்து விட்டு, மற்றவை இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  • கேரட் மற்றும் பீன்ஸை பொடியாக நறுக்கி வைக்கவும்.

  • பிறகு ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதித்தவுடன் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து வேக விடவும். ஒரு நிமிடம் கழித்து பீன்ஸ் சேர்த்து வேக விடவும், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  • முதலில் எடுத்து வைத்த வேக வைக்காத இனிப்பு சோளத்தை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.

  • காய்கறி வெந்தவுடன் அரைத்த சோள விழுதை அதனுடன் சேர்த்து நன்கு வேக விடவும். மிளகுத்தூள் சேர்க்கவும்.

  • பிறகு முதலில் வேக வைத்த இனிப்பு சோளத்தை சூப்பில் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.

  • பிறகு ஒரு கப்பில் 2 ஸ்பூன் கார்ன்பிலர் மாவு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து அதையும் சூப்பில் சேர்த்து வேக விடவும். சூப் திக்காக வருவதற்காக 5 நிமிடம் கரண்டி வைத்து நன்றாக கலந்து விட்டு இறக்கவும்.

bottom of page