top of page

நம் உடலில் எப்படி நோய் ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சு பொருட்களை நம் உள்ளுறுப்புகள் சரி செய்துகொள்கின்றன. ஆனால் அதிகப்படியான நச்சு பொருட்கள் தொடர்ந்து நம் உணவின் மூலம் உடலுக்குள் செல்லும்பொழுது நம் உடலில் உள்ள ரத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. ரத்தத்தில் ஒரு பொருளின் அளவு குறைந்தாலோ அல்லது அதிகரித்தாலோ நோய் உண்டாகிறது. ஆகையால் நம் உடலில் ஏற்படும் நோய்க்கு நாம் உண்ணும் உணவு மிக முக்கிய காரணமாக உள்ளது.


நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் நச்சுப்பொருள் கலந்துள்ளது. உதாரணமாக நம் நாட்டில் அரிசி சாதம் மிக முக்கியமான உணவு. நெல்லை விதைத்து, நெற்பயிரை வளர்த்து, நெல்மணிகளை அறுவடைசெய்து, உலர்த்தி, வேகவைத்து, காயவைத்து, அரிசியாக்கி, அதை மூட்டைகளில் அடைத்து கடைகளில் விற்பனை செய்வதுவரை ஒவ்வொரு நிலையிலும் வேதிப்பொருட்களும், நச்சுப்பொருட்களும் பயன்படுத்தப்படுகிறது. அதிகப்படியாக விளைவிப்பதற்காகவும் பூச்சி தாக்குதலிலிருந்து தடுப்பதற்காகவும் விவசாயிகள் உரங்களையும் மருந்துகளையும் பயன்படுத்துகின்றனர். அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள் பதப்படுத்தப்படும் பொழுது அதிகப்படியான மருந்துகள் அரிசி அரவை ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது. நெல்லை அரிசியாக்கிய பிறகு பல மாதங்கள், வருடங்கள் சேமிப்பதற்கு அதிகப்படியான விஷ வாயுக்களும், மருந்துகளும் பயன்படுத்தப்படுகிறது. இவை அனைத்தும் நேரடியாக அரிசியில் கலக்கிறது.


ஏற்கனவே அரிசி பல்வேறு மருந்துகளை பயன்படுத்தி பாழாக்கப்படுகிறது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் சன்னமான அரிசிதான் வேண்டுமென்று வாங்குகிறோம். சன்னமான அரிசியை தயார்செய்ய பாலிஷ் செய்யப்படுகிறது. இதன்மூலம் அரிசியில் உள்ள அனைத்து சத்துக்களும் வெளியே சென்றுவிடுகிறது. வெறும் சக்கை மற்றும் நஞ்சை உட்கொண்டால் எப்படி சக்தி மற்றும் ஆற்றல் நம் உடலுக்கு கிடைக்கும். இப்படிப்பட்ட அரிசி, ரத்தத்தில் உள்ள பொருட்களின் அளவை அதிகரிக்கும் அல்லது குறைக்கும். இவ்வாறு ரசாயன பொருட்களை பயன்படுத்திய அரிசிகளை உண்பதால் நம் உடலில் நோய் உருவாகிறது.


How disease occurs in our body?


Our organs repair the toxins in the food we eat. But when excess toxic substances continue to enter the body through our food, those toxic substances cause changes in the blood in our body. A disease occurs when the amount of a substance in the blood decreases or increases. Therefore, the food what we eat is the most important cause of disease in our body.


Every food we eat contains toxins. For example rice is the most important food in our country. Chemicals and toxic substances are used at every stage, from planting the paddy, growing the paddy, harvesting the kernels, boiling, drying, making it into rice, packing it into bags and selling it in stores. Farmers use fertilizers and pesticides to increase yield and prevent pest attacks. Excessive gases are used in rice mills when the harvested rice grains are processed. A lot of poisonous gases and drugs are used to store paddy for months and years after it becomes rice. All this is mixed directly into the rice.


Already rice is spoiled using various chemicals. The worst thing about this is that we buy thin rice. Polishing is done to prepare the refined rice. This removes all the nutrients from the rice. How can we get power and energy in our body if we consume only residue and toxins. Such rice can increase or decrease the amount of substances in the blood. Thus, eating rice with chemical ingredients causes disease in our body.

24 views0 comments
bottom of page