top of page

வெண்டைக்காய் கிரேவி

Prep Time:

20 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

7 Servings

Level:

Intermediate

About the Recipe

நீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகிவருவதன் மூலம் இரத்தசர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம். நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை நீர்ச்சத்து திரவ இழப்பை தடுத்து உடலை குளுமையாக வைக்கிறது.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக்குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.
வெண்டைக்காய் நீரைப்பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.
சுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால் ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.
வெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி போன்றவை உள்ளது.

Ingredients

  • 1/2 கிலோ வெண்டைக்காய்



    மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:



  • 1 கப் சின்ன வெங்காயம்

  • 1 மூடி தேங்காய் துருவல்

  • 4 வர மிளகாய்

  • 10 பல் பூண்டு

  • 1 ஸ்பூன் மல்லித்தூள்

  • 1 ஸ்பூன் சீரகத்தூள்

  • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய்த்தூள்

  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்

  • 4 தக்காளி

  • 25 கிராம் புளி

  • தேவையான அளவு கல் உப்பு



    தாளிப்பதற்கு:


  • சிறிது நல்லெண்ணெய்


  • 1 ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் சோம்பு

  • 1/2 ஸ்பூன் சீரகம்

  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்

Preparation

  • வெண்டைக்காயை கழுவி துடைத்து சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி எண்ணெய் விட்டு வதக்கி எடுக்கவும். மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வதக்கி ஆற விட்டு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுக்கவும்.

  • பின் தாளிக்க எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு சேர்த்து வெடித்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு முறை நன்றாக கிளறி அரைத்த விழுதை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும், நன்றாக கொதித்ததும் வதக்கிய வெண்டைக்காய் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விட்டு இறக்கவும்.

bottom of page