top of page

வரகு முருங்கைக்கீரை சூப்

Prep Time:

15Minutes

Cook Time:

30Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

வரகு அரிசியில் நார்ச்சத்துக்கள் மிக அதிகளவில் உள்ளன.இவை செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

Ingredients

  • ½ கப்  வரகு அரிசி வடித்தது

  • 2 கப்  முருங்கை இலை

  • ½ கப்  தேங்காய் துருவல்

  • 2 பெரிய வெங்காயம்

  • 3 இஞ்சி துண்டுகள்

  • 1 பூண்டு

  • ஒரு கைப்பிடி கொத்தமல்லி

  • உப்பு

  • ஒரு ஸ்பூன் மிளகு தூள்

  • ஒரு ஸ்பூன் சீரகம்

  • 2 ஸ்பூன் நெய்

  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்

Preparation

  • முதலில் வரகு அரிசியை ஒன்றுக்கு மூன்று பங்கு தண்ணீர் வைத்து வடித்துக் கொள்ளவேண்டும். 

  • பின் கொழுந்து முருங்கை இலையை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

  • பெரிய வெங்காயத்தையும், இஞ்சியையும் சிறிதாக நறுக்கவும்.  மல்லி இலையையும் நறுக்கி கொள்ளவேண்டும். 

  • வாணலியை சூடாக்கி நெய் ஊற்றி சூடானதும் சீரகம், முருங்கை இலையை சேர்த்து  லேசாக வதக்கி, பெரிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை போன்றவைகளையும் சேர்த்து அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவேண்டும். 

  • அனைத்தையும் நன்கு ஆறவைத்து அரைக்கவும், பின் அதனுடன் சிறிது தேங்காய்த்துருவல், வேகவைத்த வரகு ஆகியவற்றை சேர்த்து சிறிது சூடேற்றி உப்பு, மிளகுதூள், பெருங்காயத்தூள்  போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். 

bottom of page