top of page

வரகு மக்காச்சோள வடை

Prep Time:

25Minutes

Cook Time:

10Minutes

Serves:

9Servings

Level:

Intermediate

About the Recipe

இதயம் சீராக வேலை செய்வதற்கு இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியம். வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியம் மேம்படும்.

Ingredients

  • 3 மக்காச்சோளம்

  • 2 கப் வரகு அரிசி

  • 1 உருளைக்கிழங்கு

  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்

  • அரை ஸ்பூன் மஞ்சள் தூள்

  • அரை ஸ்பூன் சீரகம்

  • கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்

  • 1 பெரிய வெங்காயம்

  • சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கருவேப்பிலை

  • எண்ணெய்

Preparation

  • வரகு அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை இரண்டு மணி நேரம் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்.

  • மக்காச்சோ மணிகளை ஒருமுறை மட்டும் சுற்றி அரைத்துக் கொள்ளவும்.

  • அரைத்த வரகு அரிசி மாவுடன் திப்பி திப்பியாக அரைத்த மக்காச்சோளத்தை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சீரகம், பெருங்காயத்தூள், கொத்தமல்லி கருவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

  • வேக வைத்த உருளைக்கிழங்கை நன்கு மசித்து இந்த மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி தட்டையாக தட்டி காய்ந்த எண்ணெயில் இருபுறமும் சிவக்க பொரித்து எடுத்தால் அருமையான சுவையான வரகு மக்காச்சோள வடை தயார்.

  • குறிப்பு: காரம் அதிகம் தேவைப்பட்டால் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளலாம். விருப்பப்பட்டவர்கள் கேரட் முட்டைக்கோஸ் முதலிய காய்கள் சேர்த்தும் செய்யலாம்.

bottom of page