top of page

வரகு பாயாசம்

Prep Time:

3Minutes

Cook Time:

20Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

இன்றைய காலத்தில் பலரும் உடல் எடை அதிகரிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைக்க நார்ச்சத்து அதிகம் கொண்ட, கொழுப்பை கரைக்கக்கூடிய உணவுபொருட்களை சாப்பிடுவது அவசியம். வரகரிசியில் இத்தகைய நார்சத்து கொண்ட கொழுப்பை கரைக்கக்கூடிய பொருட்கள் உள்ளன. வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் சீக்கிரத்தில் எடை குறையும்.

Ingredients

  • 1 கப் வரகரிசி

  • 2 கப் பால்

  • தேவைக்கு தண்ணீர்

  • அரைகப் சர்க்கரை

  • தேவைக்கு முந்திரி, திராட்சை, பாதாம், ஏலக்காய்

  • 2 ஸ்பூன் நெய்

Preparation

  • வரகு அரிசியை அரை மணிநேரம் ஊறவைக்கவும்.பின் குக்கரில் தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும்.

  • வேகவைத்த வரகரிசியை வேறு பாத்திரத்தில் மாற்றி பின் சர்க்கரை 2ஸ்பூன் கேரமல் பண்ணி சேர்க்கவும்.பின் தேவையான பால்,மீதி சர்க்கரையைச் சேர்க்கவும்.

  • நெய் சேர்க்கவும்.பின் ஏலக்காய் பொடி சேர்க்கவும்.நெய்யில் முந்திரி, திராட்சை,வறுத்து சேர்க்கவும்.

  • பாதாம் முந்திரி திராட்சை வைத்து அலங்கரிக்கவும்.வரகு பாயாசம் ரெடி.கேரமல் சேர்ப்பதால் வித்தியசாமான ருசியைக் கொடுக்கும்.சுவையான வரகு பாயாசம் சுவைத்து மகிழுங்கள்.

bottom of page