top of page

வரகு தயிர் சாதம்

Prep Time:

15Minutes

Cook Time:

20Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் பலருக்கும் வேலைசுமை, குடும்ப பிரச்சனை காரணமாக மனஅழுத்தம் மற்றும் கவலைகள் அதிகம் ஏற்படுகிறது. அதிக மனஅழுத்தம், கவலை காரணமாக ஆண்மை குறைபாடு ஏற்படுகிறது. இவர்கள் வரகரிசியை சாப்பிடுவதன் மூலம் ஆண்மை குறைபாட்டை போக்க முடியும்.

Ingredients

  • 3/4 கப் (100 gm) வரகு

  • 1டீ ஸ்பூன் எண்ணெய்

  • 1டீ ஸ்பூன் கடுகு

  • 1டீ ஸ்பூன் உளுத்தம்பருப்பு

  • 1டீ ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 1/2டீ ஸ்பூன் சீரகம்

  • 1/2டீ ஸ்பூன் பெருங்காய தூள்

  • 2பச்சை மிளகாய் பொடியாக நறுக்கிய து

  • 1டீ ஸ்பூன் இஞ்சி பொடியாக நருக்கியது

  • 2 கப் காய்ச்சிய பால்

  • 2 கப் தண்ணீர்

  • தூள் உப்பு

  • 1 கப் புளிப்பு இல்லாத தயிர்

  • 2 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்

  • கருவேப்பிலை கொத்தமல்லி தழை பொடியாக நறுக்கியது

Preparation

  • வரகை வெறும் வாணலியில் லேசாக வறுத்து கழுவி சுத்தம் செய்து தண்ணீரில் கால் மணி நேரம் ஊற வைக்கவும்.

  • 15 நிமிடம் வரகு ஊறிய பிறகு குக்கரில் சேர்த்து தண்ணீர், பால் சேர்த்து மூடி வைத்து 2 சவுண்ட் விடவும். பிறகு பத்து அல்லது 10 நிமிடம் வரை மிதமான தீயில் குக்கரை அடுப்பில் வைத்திருந்து ஆப் செய்யவும்.

  • வரகு நன்கு குழைய வெந்து விடும். இதை நன்றாக கரண்டி கொண்டு மசித்து விடவும். ஒரு வானவில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விட்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், இஞ்சி, இவற்றை சேர்த்து வதக்கவும். தாளித்த பொருள் + துருவிய கேரட், நறுக்கிய கருவேப்பிலை கொத்தமல்லி தழை எல்லாவற்றையும் வரகு சாதத்தில் உப்பு சேர்த்து கலந்து விடவும். பிறகு அரை கப் அளவிற்கு புளிக்காத தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். சூப்பரான சுவையான ஆரோக்கியம் நிறைந்த வரகு தயிர் சாதம் ரெடி.

  • குறிப்பு: அப்போதே சாப்பிட வேண்டும் என்றால் 1 கப் அளவிற்கு புளிக்காத தயிர் சேர்த்துக் கொள்ளவும். காலையில் செய்து மதியம் சாப்பிடுவது என்றால் ஒரு ஸ்பூன் அளவிற்கு தயிர் சேர்த்து கலந்து வைக்கவும் தானே புளித்துவிடும். வெயில் காலத்தில் கால் ஸ்பூன் தயிர் சேர்த்தால் போதும். மதியம் அல்லது வெளியூருக்கு செல்லும் போது வழியில் சாப்பிட எடுத்து செல்வது என்றால் பாலிலேயே வேகவைத்து கால் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம். வெயில் காலம் என்றால் ஒரு சொட்டு தயிர் சேர்த்தால் போதும்.

bottom of page