top of page

வரகு தக்காளி சேமியா

Prep Time:

5Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

வரகரிசியை சாப்பிடுவதால் ரத்தத்தில் ஊட்டச்சத்துகள் அதிகரிக்கும். இது ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். எனவே ரத்தம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் வரகரிசி மூலம் செய்யப்படும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் நல்லது.

Ingredients

  • 1 பாக்கெட் வரகு சேமியா

  • 1/2 கப்  வெங்காயம்

  • 3 வற்றல் மிளகாய்

  • கறிவேப்பிலை

  • 1/2 டீஸ்பூன் கடுகு

  • 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு

  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு

  • தேவையான அளவு உப்பு

  • மல்லி இலை

Preparation

  • வரகு சேமியாவை ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

  • தக்காளியை நறுக்கி விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

  • வாணலியை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • பின்னர் நறுக்கிய வெங்காயம்,மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து,உப்பு கலந்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

  • பின்னர் வேக வைத்து வைத்துள்ள வரகு சேமியாவை சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்பு இரண்டு நிமிடங்கள் மூடி வைத்து வதக்கவும்.

  • கடைசியாக நறுக்கிய மல்லி இலை தூவி இறக்கவும். இப்போது மிகவும் சுவையான சத்தான வரகு தக்காளி சேமியா சுவைக்கத்தயார்.


bottom of page