top of page

வரகு சாம்பார் சாதம்

Prep Time:

20Minutes

Cook Time:

25Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும். ஏனெனில் இதில் நார்ச்சத்து மிகவும் அதிகம்.

Ingredients

  • 1கப் வரகு

  • 1/2 கப் துவரம் பருப்பு

  • 20 சிறிய வெங்காயம்

  • 1 தக்காளி

அரைக்க

  • 1/2கப் தேங்காய்த்துருவல்

  • 1இன்ச் பட்டை

  • 3கிராம்பு

  • 2 டீஸ்பூன் சாம்பார் தூள்

  • 1டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்

  • ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • இரண்டு டீஸ்பூன் வர கொத்தமல்லித்தூள்

  • ஒரு டேபிள்ஸ்பூன் ஆம்சூர் பவுடர்

தாளிக்க

  • எண்ணெய் தேவையான அளவு

  • 1டீஸ்பூன் கடுகு

  • 1டீஸ்பூன் சீரகம்

  • 1/4டீஸ்பூன் வெந்தயம்

  • 1டீஸ்பூன் கட்டி பெருங்காயத் தூள்

  • 1 வர மிளகாய்

  • 1டேபிள்ஸ்பூன் நெய்

  • தேவையான அளவு உப்பு

  •  கருவேப்பிலை

  • 2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை

Preparation

  • தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை தோல் உரித்து கழுவி வைத்துக் கொள்ளவும். தக்காளியைக் கழுவி பொடியாக அரிந்து கொள்ளவும். மற்ற அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தாளிப்பு சாமான்களை மற்றும் கருவேப்பிலை கொத்தமல்லி உப்பு அனைத்து பொருட்களையும் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

  • ஒரு வெறும் வாணலியில் வரகு சேர்த்து சூடு ஏற வறுக்கவும். ஒரு பாத்திரத்தில் மாற்றி இரண்டு முறை கழுவிவிட்டு தண்ணீரில் ஊறவைக்கவும். பருப்பு குக்கரில் சேர்த்து தண்ணீர், மஞ்சள் மற்றும் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து மூன்று சவுண்ட் விடவும்.

  • இதற்கிடையில் தேங்காய் துருவல் பட்டை லவங்கம் ஆம்சூர் தூள், காஷ்மீர் வர மிளகாய் தூள், சாம்பார் தூள் மல்லித்தூள் மஞ்சள் தூள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி போல் அரைத்துக் கொள்ளவும். நைசாக தேவை இல்லை.

  • வெந்த பருப்பு வெளியில் எடுத்து விட்டு அதே குக்கரில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, அரை ஸ்பூன் பெருங்காயத்தூள், கருவேப்பிலை வெந்தயம், வரமிளகாய் கிள்ளியது சேர்த்து தாளிக்கவும். பிறகு சிறிய வெங்காயத்தை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும் அதன் பிறகு தக்காளியை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இப்போது ஊற வைத்த வரகை தண்ணீர் வடித்துவிட்டு குக்கரில் சேர்த்து சூடேற வதக்கவும். (பருப்பு வேகும் நேரம் வரகு ஊறினால் போதும். சுமார் பதினைந்து அல்லது இருபது நிமிடங்கள்.)

  • இப்போது கல்லுப்பு சேர்த்துக் கொள்ளவும் நன்கு கலந்து விடவும். பின்பு அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து பச்சை வாசம் போக பிரட்டி விடவும். வேகவைத்த பருப்பை சேர்க்கவும். பருப்பில் தண்ணீர் இருந்தால் அதை கணக்கில் எடுத்துக் கொள்ளவும்.

  • ஒரு கப் வரகிற்கு 4 கப் அளவிற்கு தண்ணீர் வைத்தேன் மிகவும் சரியாக இருந்தது. 4 கப் அளவு தண்ணீர் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கலந்து விடவும். இப்போது மீதி அரை டீஸ்பூன் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து விடவும். இவையெல்லாம் கொதிக்க ஆரம்பித்தவுடன் குக்கரை மூடி வெயிட் சேர்க்கவும்.

  • மூன்று விசில் விட்டு பிறகு மிதமான தீயில் பத்து நிமிடம் வைத்து அடுப்பை நிறுத்தி விடவும்.

  • ஆவி அடங்கிய பிறகு குக்கரை திறந்து ஒரு கரண்டி கொண்டு நன்கு கலந்து விடவும். மீண்டும் சிறிது கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தலை சேர்த்து கலந்துவிடவும். கடைசியாக நெய் சேர்த்துக் கொள்ளவும். தொட்டுக்கொள்ள வடகம் அப்பளம் அல்லது ஏதாவது ஸ்னாக்ஸ் இருந்தால் நன்றாக இருக்கும். சுவையான ஆரோக்கியமான எளிதான வரகு சாம்பார் சாதம் தயார்.

bottom of page