top of page

வரகு கேசரி

Prep Time:

5Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

வரகரிசியில் வைட்டமின் பி 9 என்று அறியப்படும் ஃபோலேட் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு அவசியமாகும்.

Ingredients

  • 100கி வரகு

  • 125கி சர்க்கரை

  • 4ஸ்பூன் நெய்

  • 2ஸ்பூன் எண்ணெய்

  • தேவையானஅளவு முந்திரிப் பருப்பு

  • தேவையானஅளவு திராட்சை

  • 2 ஏலக்காய்

  • 1பின்ச் உப்பு

  • அலங்கரிக்க டூட்டி ப்ரூட்டி

Preparation

  • வரகு அரிசியை நன்றாக கழுவி ஒரு வாணலியில் ஈரப்பதம் போக சிறுதீயில் வைத்து வறுக்கவும்.

  • கடாயில் 2 ஸ்பூன் நெய்விட்டு முந்திரி,திராட்சை வறுத்து வேறு பௌலுக்கு மாற்றவும்.

  • அதே நெய்யில் வரகு சேர்த்து 2 நிமிடங்கள் நன்றாக வறுக்கவும்.பின்,ஆற வைத்து மிக்ஸிஜாருக்கு மாற்றி ரவை பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.

  • ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி

    கொதிக்கும் பொழுது மஞ்சள் தூள் மற்றும் 1பின்ச் உப்பு சேர்க்கவும். அரைத்து வைத்த வரகு சேர்த்து கட்டிகள் இல்லாமல் கிளறவும்.(1கப் வரகுக்கு 5 மடங்கு தண்ணீர் சேர்க்கவும்)

  • சில நிமிடங்களில் வரகு தண்ணீர் முழுவதையும் இழுத்துக் கொள்ளும்.உடனே,மூடி போட்டு வேக விடவும்.

  • நன்றாக வெந்ததும் கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை சேர்த்துக் கிளறவும். சர்க்கரை கரைந்து கட்டிகள் ஏற்படும்.எனவே நன்றாக கட்டிகள் வராமல் கிளறவும்.

  • சிறிது நேரத்தில் கடாயில் ஒட்டாமல் கேசரி நன்றாக திரண்டு வரும்.அப்போது ,2ஸ்பூன் சூடான நெய் விட்டு கிளரவும்.,2ஸ்பூன் எண்ணெய் மற்றும் ஏலக்காய் தட்டி சேர்த்து கிளறவும்.

  • கடைசியாக வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கிளறி இறக்கவும்.

  • அவ்வளவுதான். சுவையான வரகு கேசரி ரெடி.

bottom of page