top of page

வரகு கிச்சடி

Prep Time:

15Minutes

Cook Time:

15Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

மூட்டுவலியை குறைக்க உதவுகிறது. கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டி, கண் நரம்பு நோய்களைத் தடுக்கும் குணம் உண்டு. நிணநீர் சுரப்பிகளைச் சீராக்கும். மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது.

Ingredients

  • 200g வரகு அரிசி

  • 100g பாசி பருப்பு

  • எலுமிச்சை அளவு புளி

  • 1காய்கறிகள் - கேரட் , பீன்ஸ் 100g, உருளை கிழங்கு 1, தக்காளி 1 & பெரிய வெங்காயம் 1

  • தாளிக்க - கடுகு1 ஸ்பூன், உளுந்தம்பருப்பு 1/2 ஸ்பூன், சீரகம் 1/2 ஸ்பூன், பச்சை மிளகாய் 2, காய்ந்த மிளகாய் 2 & கறிவேப்பிலை சிறிதளவு

  • 2 ஸ்பூன்நெய் , எண்ணெய் 4 ஸ்பூன் & தேவையான அளவு உப்பு

  • பெருங்காயத்தூள் 1/2 ஸ்பூன், மஞ்சள் தூள் 1 ஸ்பூன் & சாம்பார் தூள் 3 ஸ்பூன்

Preparation

  • வரகு அரிசி, பாசி பருப்பு இரண்டையும் நன்கு கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும். புளி கரைசல் ரெடி பண்ணவும். காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

  • குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேய்ப்பில்லை தாளிக்கவும். வெங்காயம், தக்காளி வதக்கவும். காய்கறிகள் சேர்க்கவும். காயம் தூள், மஞ்சள் தூள், சாம்பார் தூள் & உப்பு சேர்க்கவும். புளி கரைசல் சேர்க்கவும். ஒரு கப் அரிசிக்கு 4 பங்கு அளவு தண்ணீர் சேர்க்கவும். ஊற வைத்த வரகு அரிசி & பாசி பருப்பு சேர்க்கவும். நன்கு கலந்து 5 விசில் விடவும்.

  • குக்கர் மூடி திறந்து நன்கு குழைவாக வெந்த சாதத்தில் 2 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறவும். சுவையான சத்தான வரகு கிச்சடி தயார். அப்பளத்துடன் பரிமாறவும்.

bottom of page