top of page

வரகு உப்புமா

Prep Time:

15 Minutes

Cook Time:

25 Minutes

Serves:

5 Servings

Level:

Beginner

About the Recipe

வரகு அரசியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன.
சிறுநீர் பெருக்கியாக விளங்கும் வரகு அரிசி மலச்சிக்கலை போக்கி உடல் பருமனை குறைக்கிறது.
சமைக்கப்பட்ட 1 கப் வரகு அரிசியில் காப்பர் - 31 சதவீதம், பாஸ்பரஸ் - 25 சதவீதம், மாங்கனீஸ் - 24 சதவீதம், மக்னீசியம் - 19 சதவீதம், நார்ச்சத்து, இரும்பு, கால்சியம் மற்றும் பி விட்டமின்கள் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது.

Ingredients

  • 200 கிராம் உடைத்த வரகு

  • 1 கேரட்

  • 1 கைப்பிடி பச்சை பட்டாணி

  • 5 பீன்ஸ் பொடியாக நறுக்கியது

  • 1 பெரிய வெங்காயம்

  • 5 பச்சை மிளகாய்

  • 1/2 ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 1 கைப்பிடி மல்லித்தழை

  • 1 கொத்து கறிவேப்பிலை

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். தேவையான அளவு கடலைஎண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கடலைப் பருப்பு சேர்க்கவும்.

  • கடலைப் பருப்புடன் வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கேரட், பீன்ஸ், பச்சைபட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும். காய்கள் அரைவேக்காடு வெந்தவுடன் ஒரு டம்ளர் உடைத்த வரகுக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும் .நான் இரண்டு டம்ளர் வரகு எடுத்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றினேன்.

  • காய் வெந்ததும் தண்ணீர் கொதிக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்த வரகை சேர்த்துக் கிளறவும்.

  • உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

bottom of page