top of page

வரகு உப்புமா

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

5Servings

Level:

Beginner

About the Recipe

இன்று உலகில் பெரும்பாலனோருக்கு இருக்கும் ஒரு நோய் நீரிழிவு நோயாகும். நீரிழிவு நோயை கட்டுப்படுத்த நமது உடல் இயற்கையிலேயே இன்சுலினை சுரக்கும். வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு வேகமாக குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும்.

Ingredients

  • 200கிராம் உடைத்த வரகு

  • 1கேரட்

  • 1கைப்பிடி பச்சை பட்டாணி

  • 5பீன்ஸ் பொடியாக நறுக்கியது

  • 1பெரிய வெங்காயம்

  • 5பச்சை மிளகாய்

  • 1/2ஸ்பூன் கடுகு

  • 1 ஸ்பூன் கடலைப்பருப்பு

  • 1கைப்பிடி மல்லித்தழை

  • 1கொத்து கறிவேப்பிலை

  • தேவையான அளவு உப்பு

Preparation

  • அடி கனமான வாணலியை அடுப்பில் வைத்து அடுப்பை பற்ற வைக்கவும். தேவையான அளவு கடலை எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு கடலைப்பருப்பு சேர்க்கவும்.

  • கடலைப் பருப்புடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  • வெங்காயம் வதங்கிய உடன் கேரட் பீன்ஸ் பச்சை பட்டாணி சேர்த்து நன்றாக வதக்கவும். கொஞ்சம் உப்பு சேர்த்துக் கொள்ளவும். காய்கள் அரைவேக்காடு வெந்தவுடன்...

  • ஒரு டம்ளர் உடைத்த வரகுக்கு 2 டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.நான் இரண்டு டம்ளர் வரகு எடுத்து நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றினேன்.

  • காய் வெந்ததும் தண்ணீர் கொதிக்கும் நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்த வரகை சேர்த்துக் கிளறவும்.

  • உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து மல்லித்தழை தூவி இறக்கவும்.

bottom of page