top of page

வரகு அரிசி முறுக்கு

Prep Time:

30Minutes

Cook Time:

10Minutes

Serves:

15Servings

Level:

Advanced

About the Recipe

சைவ உணவுப் பிரியர்களுக்கு புரதங்களைப் பெற வரகு ஒரு சிறந்த வழியாகும். 100 கிராம் வரகு அரிசியில் சுமார் 8.3 கிராம் புரதம் உள்ளது.

Ingredients

  • 500 கிராம் வரகு அரிசி

  • 300 கிராம் பொட்டு கடலை

  • 150 கிராம் வெண்ணெய்

  • காரத்திற்கு ஏற்ப மிளகாய்தூள்

  • சிறிதளவு பெருங்காயத்தூள்

  • தேவையான அளவு உப்பு

  • தேவையான அளவு தண்ணீர்

Preparation

  • முதலில் வரகு அரிசியை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின்பு 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மைய அரைக்கவும்.

  • பொட்டுக்கடலையை பொடி செய்து கொள்ளவும். நன்கு சலித்து விட்டு அதனை மாவுடன் கலக்கவும். அதனுடன் தேவையான அளவு உப்பு,காரம் அனைத்தையும் சேர்க்கவும். சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்கு பிசையவும்.

  • பின்பு வெண்ணையை உருக்கி அதனுள் ஊற்றவும். அனைத்தையும் சேர்த்து மாவை நன்றாக பிசையவும். பின்பு தேவையான அச்சில் முறுக்கை பிழிந்து எடுக்கவும். எண்ணெய் சூடானவுடன் முறுக்கை போட்டு எடுக்கவும்

bottom of page