top of page

வரகு அரிசி மாம்பழ பணியாரம்

Prep Time:

20Minutes

Cook Time:

4Minutes

Serves:

4Servings

Level:

Intermediate

About the Recipe

வரகு அரிசி கோதுமையை விட சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து, அரிசி மற்றும் கோதுமையில் இருப்பதை விட அதிக அளவில் உள்ளது. வரகு அரிசியில் மாவுச்சத்தும் குறைவாக காணப்படுவதால் இது உடல் ஆரோக்கியம் பெற உதவுகிறது.

Ingredients

  • 1 கப் வரகு அரிசி

  • 2 டேபிள்ஸ்பூன் உளுந்து

  • 1 டீஸ்பூன் துவரம்பருப்பு

  • சிறிது வெந்தயம்

  • 6 ஏலக்காய்

  • 1/2 கப் துருவிய வெல்லம்

  • 3/4 கப் மாம்பழத் துண்டு

  • 3 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய்

  • 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா

  • தேவையான அளவு உப்பு

  • தேவையான அளவு நெய்

Preparation

  • பாத்திரத்தில் வரகு அரிசி, உளுந்து, துவரம் பருப்பு, வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக சேர்க்கவும்.

  • இதனை இரண்டு முறை நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி குறைந்தது 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

  • நன்றாக ஊறிய பிறகு தண்ணீரை வடித்து இதனுடன் ஏலக்காய் சேர்த்து முதலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும் பிறகு இதனுடன் வெல்லத்தை சேர்க்கவும்.

  • இத்துடன் மாம்பழத் துண்டுகளை சேர்த்து மையாக இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்... இதனை மற்றொரு பாத்திரத்தில் மாற்றி குறைந்தது ஐந்து மணி நேரம் வைக்கவும்.

  • 5 மணி நேரம் கழித்து இதனுடன் துருவிய தேங்காய் பேக்கிங் சோடா உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • பணியார சட்டியை மிதமான தீயில் வைத்து எல்லா குழிகளிலும் நெய் ஊற்றவும் பிறகு கலந்து வைத்திருக்கும் மாவை இதனுடன் ஊற்றி மிதமான தீயில் மூடி 2 நிமிடம் வைக்கவும்.

  • ஒருபுறம் வெந்த பிறகு மெதுவாக திருப்பி மீண்டும் மிதமான தீயில் ஒரு நிமிடம் வைத்து எடுக்கவும்.

bottom of page