top of page

வரகு அரிசி கஞ்சி

Prep Time:

5Minutes

Cook Time:

35Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நமது உடல்நிலை நன்றாக இருக்க நமக்கு தேவையான அளவு தாது உப்புக்கள், இரும்பு சத்து, வைட்டமின்கள், சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை மிகவும் அத்தியாவசியமாகும். மேற்கண்ட இந்த சத்துக்கள் யாவும் வரகரிசியில் நிறைந்துள்ளது. வரகரிசி பயன்படுத்தி செய்யப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அனைத்தும் குறைவின்றி கிடைக்கும்

Ingredients

  • 50 கிராம் வரகு அரிசி

  • 1 தேக்கரண்டி எண்ணெய்

  • 1/4 தேக்கரண்டி சீரகம்

  • 2 சிட்டிகை மஞ்சள் தூள்

  • 10 சின்ன வெங்காயம்

  • 5 பல் பூண்டு

  • 1/2 தக்காளி

  • கொத்தமல்லி இலை

  • தேவையானஅளவு தண்ணீர்

  • தேவையானஅளவு உப்பு

Preparation

  • ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து இதில் ஒன்றும் பாதியுமாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும் கூடவே சீரகத்தை சேர்த்து தாளிக்கவும். வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.

  • பின் 10 நிமிடம் ஊற வைத்த வரகு அரிசியை தண்ணீர் வடித்து சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால் பாசிப்பருப்பு அல்லது பச்சை பயறை சேர்த்துக் கொள்ளலாம்.

  • இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டு குக்கரை மூடி அரை மணி நேரம் சிறு தீயில் வேக விடவும். ஆரோக்கியமான வரகு அரிசி கஞ்சி தயார்.

bottom of page