top of page

வரகரசி - கொள்ளு அடை

Prep Time:

15Minutes

Cook Time:

4Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

மாதவிடாய் கோளாறுகளால் அதிக அளவு பாதிப்பை சந்திக்க கூடிய பெண்கள் வரகு அரிசியை சமைத்து சாப்பிடும் போது இரத்தப்போக்கு சீரடையும். அதுபோல அவர்களுடைய வயிற்றுவலியும் குறையும்.

Ingredients

  • வரகரிசி - 100 கிராம்

  • கொள்ளு - 25 கிராம்

  • துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து - 50 கிராம், காய்ந்த  மிளகாய் - 8

  • சீரகம், பெருங்காயம் - தேவையான அளவு

  • ஓமம் - சிறிதளவு

  • தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு

  • துருவிய கேரட் / கோஸ் /முருங்கைக் கீரை தளிர் நறுக்கியது

  • ஒரு சிறிய கப்

  • உப்பு - தேவையான அளவு

Preparation

  • வரகரிசி மற்றும் கொள்ளுடன் காய்ந்த மிளகாய், சீரகம், உப்பு, பெருங்காயத் தூள், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, ஓமம் என அனைத்தையும் சேர்த்து 5 மணி நேரம் ஊறவைக்கவும்.ஊற வைத்த பொருட்களை கொரகொரப்பாக அரைத்து 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.

  • 2 மணி நேரம் கழித்து நறுக்கிய கோஸ் /முருங்கைக் கீரை தளிர் இவற்றில் ஏதாவது ஒன்றை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

  • தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் மாவை ஒரு கரண்டி ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.

bottom of page