top of page

ராகி மாவு அடை

Prep Time:

15Minutes

Cook Time:

10Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

மற்ற சிறுதானியங்களில் இருப்பதை விட 5-30 மடங்கிற்கு ராகியில் கால்சியம் உள்ளது. மேலும் பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு போன்ற தாதுப்பொருட்களும் இதில் அதிக அளவில் உள்ளன. எலும்பு உறுதிக்கும் ஆரோக்கியத்திற்கும் கால்சியம் என்பது மிகவும் முக்கியமான தாதுப்பொருளாகும்.

Ingredients

  • ராகி மாவு - 1 கப்

  • முருங்கை கீரை - 1 கப்

  • வெங்காயம் - ½ கப்

  • பச்சை மிளகாய் - 1

  • கடுகு,உளுந்து - 1 டீஸ்பூன்

  • தேங்காய் துருவல் - ¼ கப்

  • உப்பு தேவையான அளவு

  • எண்ணெய் தேவையான அளவு

Preparation

  • முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து சேர்த்து தாளிக்கவும். பின்பு அதில் நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து வதக்கி உடனே, முருங்கை கீரையை சேர்க்கவும். இந்த கலவையை தனியாக எடுத்து கொள்ளவும்.

  • பின்பு ஒரு பாத்திரத்தில் ராகி மாவு சேர்த்து அதனுடன் வதக்கிய கலவை, சிறிதளவு நீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசையவும்.

  • இப்போது அதை அடை போல் தட்டி தவாவில் போட்டு எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். சூப்பரான ராகி அடை தயார். இதை தேங்காய் சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் ருசி அட்டகாசமாக இருக்கும்.

bottom of page