top of page

மொச்சை மசாலா சாம்பார்

Prep Time:

20Minutes

Cook Time:

30Minutes

Serves:

20Servings

Level:

Beginner

About the Recipe

மொச்சைக் கொட்டையில் உள்ள நார்சத்து, குடலில் நச்சுப்போருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்று நோய் உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கிறது. மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவு ‘ஜெனிச்டின் மற்றும் டைட்சின்’ என்னும் ஐஸோஃப்ளவன்களைக் கொண்டுள்ளது. இது மார்பக புற்றுநோயைத் தடுப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

Ingredients

  • 3 கப் அவரை கொட்டை

  • தேவையானஅளவு தண்ணீர்

  • தேவையானஅளவு உப்பு

  • 2 ஸ்பூன் எண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • சிறிது கறிவேப்பிலை

அரைக்க வேண்டியவை

  • 3 ஸ்பூன்அரிசி

  • 4 தக்காளி

  • 6 வரமிளகாய்

  • 2 ஸ்பூன் கொத்தமல்லி தூள்

  • 1 கப் சின்ன வெங்காயம்

  • 4 பல் பூண்டு

Preparation

  • குறிப்பிட்ட பொருட்களை அரைத்து எடுத்துக் கொள்ளவும்


  • முதலில் அவரை கொட்டையை 15 நிமிடம் வேக வைத்து, பின் அரைத்து வைத்த மசாலா சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடவும்


  • கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு பொரித்த உடன் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின் குழம்பில் சேர்த்து கொண்டால் சுவையான அவரை கொட்டை குழம்பு தயார்

bottom of page