top of page

மொச்சை கொட்டை பயிறு கிரேவி

Prep Time:

20Minutes

Cook Time:

40Minutes

Serves:

7Servings

Level:

Intermediate

About the Recipe

மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கவிடாமல் நார்ச்சத்து உதவுகிறது. இதய தமனிகளின் சுவர்கள் அடர்த்தி அதிகரிக்காமல் இருக்க போலேட் உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம், இதய நோய்க்கான அபாயத்தைக் குறைக்கிறது.

Ingredients

  • 1 கப் மொச்சைகொட்டை பயிறு

  • 5 சின்ன வெங்காயம்

  • 2 பெரிய வெங்காயம்

  • 1 தக்காளி

  • ½ கப் துருவிய தேங்காய்

  • 1 கொத்து கறிவேப்பிலை

  • 1 ஸ்பூன் கடுகு

  • ½ ஸ்பூன் மஞ்சள்தூள்

  • 2 ஸ்பூன் நல்லெண்ணெய்

  • 1 ஸ்பூன் மல்லிதூள்

  • 1 ஸ்பூன் வத்தல் தூள்

  • தேவைக்கு தண்ணீர்

  • தேவைக்கு உப்பு

Preparation

  • முதலில் மொச்சை பயிறை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது குக்கரில் மொச்சை கொட்டை,மஞ்சள்தூள், தக்காளி ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்.

  • இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரில் அரை கப் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், கருவேப்பிலை, மல்லித் தூள் மற்றும் வத்தல் தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்து அரைத்து எடுக்க வேண்டும்.

  • பிறகு ஒரு பாத்திரத்தில் கடுகு தாளித்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


  • இப்பொழுது வேகவைத்து வைத்திருக்கும் மொச்சைகொட்டை சேர்த்து வதக்கவும். அதோடு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீரும் சேர்த்துக் கொள்ளவும்.இதை 10 நிமிடம் கொதிக்க விடவும் தேவையான உப்பு சேர்த்துக் கொள்ளவும்.

  • சுவையான மற்றும் மிகவும் சத்தான மொச்சைகொட்டை  கிரேவி ரெடி.

bottom of page