top of page

முள்ளங்கி சூப்

Prep Time:

10 Minutes

Cook Time:

25 Minutes

Serves:

3 Servings

Level:

Beginner

About the Recipe

முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளகி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது.
செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்குவதால் மூலநோய், வாயுதொந்தரவு, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது.

Ingredients

  • 1 வெள்ளை முள்ளங்கி

  • 1 தக்காளி

  • 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவு


  • உப்பு

  • 2 ஸ்பூன் மிளகுதூள்

  • 2 ஸ்பூன் உருக்கிய நெய்

  • 1 டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி தழை

  • 2 கப் தண்ணீர்

Preparation

  • முள்ளங்கி, தக்காளியை நறுக்கவும். சிறிய பேனில் நறுக்கின முள்ளங்கி,  தக்காளி, உப்பு, மிளகு தூள், தண்ணீர் சேர்க்கவும்.

  • பேனை மூடி அடுப்பை சிறிய தீயில் வைத்து வேக விடவும்.வெந்ததும் அடுப்பை நிறுத்தி விட்டு ஆற விடவும்.

  • வேக வைத்த தண்ணீரை தனியாக எடுத்து வைக்கவும். வெந்த காய்கறியை மிக்ஸி ஜாரில் போட்டு மைய அரைத்து பேனில் ஊற்றி கொதிக்க விடவும்.

  • சோளமாவை தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்து ஊற்றி அதில் கொதிக்க விடவும். மிளகுதூள் சிறிது போடவும். பிறகு சிறிது நெய் விடவும்.

  • பின் அடுப்பை நிறுத்தி விட்டு மேலே கொத்தமல்லி தழை, நெய் விட்டு சுடசுட பரிமாறவும்.

bottom of page