top of page

மிளகாய் பஜ்ஜி

Prep Time:

10 Minutes

Cook Time:

10 Minutes

Serves:

2 Servings

Level:

Beginner

About the Recipe

நோய்கள் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.
இதயத்துக்கு நல்லது.பச்சைமிளகாயில் பொட்டாசியம், மக்னீசியம், இரும்புசத்து அதிகம் இருப்பதால் சீரான இதய துடிப்பிற்கும், இரத்த ஓட்டத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. இரும்புசத்து. பச்சைமிளகாயில் இருக்கும். விட்டமின் சி இரும்பு சத்தை கிரகித்துக் கொள்ள உதவுகிறது.

Ingredients

  • 4 பஜ்ஜி மிளகாய்

  • 1 கப் கடலை மாவு

  • 1/4 கப் அரிசி மாவு

  • 2 டீ ஸ்பூன் மிளகாய்தூள்

  • ஒரு சிட்டிகை சோடா உப்பு

  • 1/2 ஸ்பூன் மஞ்சள்தூள்

  • உப்பு

  • பொரிப்பதற்கு எண்ணெய்

Preparation

  • பஜ்ஜி மிளகாயை நன்கு கழுகி ஈரம் போக துடைத்து இரண்டாக வெட்டி உள்ளே இருக்கிற விதையை எடுத்து விடவும்.

  • ஒரு பவுலில் கடலைமாவு, அரிசிமாவு, சோடாஉப்பு மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

  • அதில் சூடான எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி கலந்த பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து தோசைமாவு பதத்துக்கு கரைக்கவும்.

  • ஸ்டவ்வில் வாணலை வைத்து சூடானதும் மிளகாயை கடலை மாவு கரைசலில் டிப் செய்து சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

bottom of page