top of page

மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

Prep Time:

30Minutes

Cook Time:

10Minutes

Serves:

2Servings

Level:

Beginner

About the Recipe

மாப்பிள்ளை சம்பா அரிசியில் இரும்பு சத்து, துத்தநாக சத்து உள்ளது. ரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிட்டால் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு உதவும். நார்ச்சத்து கொண்ட இந்த அரிசியை சமைத்து சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும். வயிறு, வயிற்றுப்புண் தொடர்பான நோய்கள் குணமடையும். குழந்தைகளுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியில் கஞ்சி, புட்டு, கொழுக்கட்டை செய்து தர எலும்புகள் வலிமையடையும்.

Ingredients

  • வடித்த மாப்பிள்ளை சம்பா சாதம் - 1.5 கப்

  • தேங்காய் துருவல் 1 கப்

  • எண்ணெய் 2.5 டேபிள் ஸ்பூன்

  • கடுகு, உளுந்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

  • கடலை பருப்பு 1 டீஸ்பூன்

  • முந்திரி பருப்பு 15-20 

  • மிளகாய் வற்றல் - 2

  • பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

  • கறிவேப்பிலை சிறிதளவு

  • கொத்தமல்லி சிறிதளவு

  • இஞ்சி சிறிய துண்டு

Preparation

  • முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, முந்திரி, உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்

  • பின்பு துருவி வைத்துள்ள தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

  • ஓரளவு பொன்னிறமாக மாறும் போது, மாப்பிள்ளை சம்பா சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு நன்கு கிளறி விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும். சுவையான மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம் ரெடி

bottom of page