top of page

மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம்

Prep Time:

20 Minutes

Cook Time:

45 Minutes

Serves:

7 Servings

Level:

Beginner

About the Recipe

முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது மாப்பிள்ளைச்சம்பா.

Ingredients

  • மாப்பிள்ளை சம்பா அரிசி  2 கப்

  • காய்கறிகள் 400 கிராம்

  • துவரம் பருப்பு150 கிராம்

  • மஞ்சள் தூள் 2 சிட்டிகை

  • கடுகு, சீரகம், மிளகு,

  • வெந்தயம் அரை தேக்கரண்டி

  • காய்ந்த மிளகாய் 3

  • தக்காளி 2

  • சின்ன வெங்காயம் 100 கிராம்

  • பூண்டு 20 பல்

  • சாம்பார் பொடி 3 மேசைக் கரண்டி

  • புளி ஒரு எலுமிச்சை அளவு

  • எண்ணெய், உப்பு தேவையான அளவு

  • கறிவேப்பிலை சிறிதளவு

  • கொத்தமல்லி தழை சிறிது

Preparation

  • முதலில் காய்கறிகள், வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

  • பிறகு துவரம் பருப்பை வேக வைத்து கொள்ளவும்.

  • தொடர்ந்து ஒரு குக்கரில் மாப்பிள்ளைச் சம்பா அரிசியுடன் மூன்று பங்கு தண்ணீர், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு குழைய வேக வைக்கவும்.

  • இதன்பிறகு, ஒரு பாத்திரம் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். பின்னர் சீரகம், வெந்தயம், மிளகு, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.

  • தொடர்ந்து வேகவைத்த துவரம் பருப்பு, மஞ்சள்தூள், தக்காளி சேர்த்து நன்கு வதக்கி குழைய வேக வைக்கவும்.

  • இதன்பிறகு தனியாக ஒரு பாத்திரம் எடுத்து, அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கி, கடுகு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்துக் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.

  • நாம் சேர்த்த காய்கறிகள் சிறிது வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து வதக்கவும். பின்னர் அவற்றுடன் கரைத்தபுளித்தண்ணீர் சேர்த்து நன்றாகவேக வைத்து கொள்ளவும்.

  • இப்போது வேக வைத்த பருப்பையும் காய்கறியுடன் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

  • தொடர்ந்து இந்தச் சாம்பார் கலவையைக் குழைய வேக வைத்த சாதத்துடன் சேர்த்துநன்கு கலந்து கொள்ளவும்.

  • பிறகு நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி தழைகளைத் தூவி இறக்கினால் சுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் தயாராக இருக்கும்.

bottom of page