top of page

மாப்பிள்ளை சம்பா உளுந்து களி

Prep Time:

10Minutes

Cook Time:

25Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

இந்த அரிசியில் உள்ள உணவு நார்ச்சத்து, உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது, இது இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. இதில் கலோரிகள் குறைவாகவும், உணவு நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.

Ingredients

  • உளுந்து 1/2 கப்

  • மாப்பிள்ளை சம்பா அரிசி 1 மேஜைக்கரண்டி

  • வெல்லம் அல்லது கருப்பட்டி பொடித்து 1/2 கப் + 1 மேஜைக்கரண்டி

  • நல்லெண்ணெய் 3 மேஜைக்கரண்டி

Preparation

  • உளுந்தையும், மாப்பிள்ளை சம்பா அரிசியையும் தனித்தனியாக ஒரு வாணலியில் பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.

  • ஆறியபின் மிக்சியில் நைசான மாவாக அரைக்கவும்.

  • ஒரு அடி கனமான பாத்திரத்தில் வெள்ளம்/ கருப்பட்டி சேர்த்து அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  • அரைத்த மாவை அதில் சேர்த்து அடுப்பை அணைக்கவும். ஒரு கரண்டி கொண்டு உடனே கட்டி இல்லாமல் கலக்கவும்.

  • மேலும் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலக்கவும். மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 10 நிமிடம் வேக வைக்கவும்

bottom of page