top of page

மாப்பிள்ளை சம்பா இட்லி

Prep Time:

30 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

10 Servings

Level:

Beginner

About the Recipe

முன்னோர்கள் காலத்தில் பெண்ணை திருமணம் செய்து கொடுக்கும் முன் இளவட்ட கல்லை தூக்க சொல்லி மாப்பிள்ளையின் பலத்தை அறிவார்கள். இந்த பலத்தை அசராமல் தருகிறது மாப்பிள்ளைச்சம்பா.

Ingredients

  • மாப்பிள்ளை சம்பா அரிசி 3 கப்

  • இட்லி அரிசி 1 கப்

  • உளுந்து 1 கப்

  • வெந்தயம் 1/2 ஸ்பூன்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • மாப்பிள்ளைசம்பா, இட்லி அரிசி தனியாகவும் உளுந்து மற்றும் வெந்தயம் தனியாகவும் கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • உளுந்து மற்றும் வெந்தயம் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.

  • மாப்பிள்ளை சம்பா மற்றும் இட்லி அரிசியையும் சேர்த்து 20-25 நிமிடங்கள் அரைத்து கொள்ளவும்.

  • இப்போது அரிசி மற்றும் உளுந்து மாவையும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 8 மணிநேரம் புளிக்க வைத்து கொள்ளவும்.

  • புளித்த பிறகு லேசாக கலக்கி இட்லி தட்டில் மாவை ஊற்றி 10-15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.

  • சட்னி அல்லது சாம்பார் உடன் சுவைக்கலாம்.

bottom of page