top of page

மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம்

Prep Time:

5Minutes

Cook Time:

50Minutes

Serves:

10Servings

Level:

Intermediate

About the Recipe

மாப்பிள்ளை சம்பா அரிசியை தினசரி உணவில் சேர்த்துகொண்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக கிடைக்கும். உடலில் எதிர்ப்புசக்தி அதிகரிப்பதால் உடல் நல கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. எப்போதும் உ ற்சாகமாக இருக்க வைக்கிறது. சோர்வை நீக்கி சுறுசுறுப்பை தருவதோடு நரம்புகளுக்கும் வலு கொடுக்கிறது.

Ingredients

  • 1 டம்ளர் மாப்பிள்ளை சம்பா அரிசி

  • 1 1/2 டம்ளர் வெல்லம்

  • 3 ஏலக்காய்

  • 15 முந்திரி

  • 15 உலர்ந்த திராட்சை

  • 1 கப் காய்ச்சிய பால்

  • 5 ஸ்பூன் நெய்

Preparation

  • மாப்பிள்ளை சம்பா அரிசியை சுத்தம் செய்து ஒரு கடாயில் வறுக்கவும்.

  • மிதமான தீயில் வைத்து அரிசி பொரிந்து வரும் பொழுது இறக்கி ஆறவிடவும்.

  • வெல்லத்துடன் தண்ணீர் சேர்த்து பாகு காய்ச்சவும்.

  • ஆரின அரிசியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ரவை இருக்கும் பதத்திற்கு அரைக்கவும்.

  • வெல்லம் கரைந்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கி விடவும்.பதம் தேவையில்லை.

  • அரைத்த அரிசியை குக்கரில் சேர்த்து இரண்டு மடங்கு தண்ணீர் வைத்து 3 விசில் வேகவிடவும்.

  • வேக வைத்த அரிசியினை ஆறவிட்டு நன்கு கிளறி விடவும்.

  • இதனுடன் வடிகட்டிய பாகை சேர்க்கவும்.


  • இளம் சூடாக இருக்கும் பொழுது பாலை சேர்க்கவும். இதனை நன்கு கலக்கவும்.


  • திராட்சை முந்திரியை பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் கலந்து

    இளம் சூட்டுடனோ அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்தோ பரிமாறலாம். சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த மாப்பிள்ளை சம்பா அரிசி பாயாசம் ரெடி.

bottom of page