top of page

மசாலா டீ

Prep Time:

3 Minutes

Cook Time:

10 Minutes

Serves:

4 Servings

Level:

Beginner

About the Recipe

டீயில் சிறிதளவு காஃபின் (Caffeine) இருக்கிறது. இது மூளையில் உள்ள நியூரோடிரான் ஸ்மீட்டர்களைத் தூண்டி, நரம்பு இயக்கங்களைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.இதனால் சுறுசுறுப்பான உணர்வு கிடைக்கும். மூளை நன்றாக இயங்கும்.
டீ தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு மறதி நோயான அல்சைமர் மூளையில் டோபோமைன் சரியாகச் சுரக்காததால் வரும் பார்கின்சன் வருவதற்கான வாய்ப்பு 25 சதவிகிதம் குறைகிறது.
டீ ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது என்பதால் உடலில் தேவையற்ற கட்டிகளை வளர விடாது. பெருங்குடல், மார்பகம் மற்றும் ப்ராஸ்டேட் புற்றுநோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகளை கிரீன்டீ குறைக்கிறது.
டீயில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உடல் மற்றும் மனச் சோர்வைப் போக்கக் கூடியது. வெயிட்லாஸ் செய்ய விரும்புகிறவர்கள் தினமும் ஒரு கிளாஸ் கிரீன் டீ அருந்தலாம். இது கொழுப்பைக் கரைத்து ஸ்லிம் ஆக உதவும்.

Ingredients

  • 4 ஏலக்காய்

  • 2 பட்டை

  • 2 கிராம்பு

  • 1/2 இஞ்சி

  • டீ தூள்

Preparation

  • இஞ்சி பட்டை கிராம்பு ஏலக்காய் பொடி செய்ய வேண்டும்.

  • தண்ணீரில் டீ தூள் மற்றும் அரைத்த பொடியை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

  • பின்பு வடிகட்டி ஆற்றி பரிமாற வேண்டும்.

bottom of page