top of page

பூங்கார் அரிசி முறுக்கு

Prep Time:

10Minutes

Cook Time:

10Minutes

Serves:

12Servings

Level:

Advanced

About the Recipe

சிறு குழந்தைகளுக்கு இந்த அரிசி உணவாகக் கொடுப்பதன் மூலமாக செரிமான பிரச்சனைகள் தடுக்கப்பட்டு குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுவதையும் தடுக்கும்.

Ingredients

  • 4 கப் பூங்கார் அரிசி மாவு 

  • 1 கப் உளுந்து (சிவக்க வறுத்தது)

  • 1 ஸ்பூன்  சீரகம்

  • 1 ஸ்பூன் கட்டி பெருங்காயம் (ஊற வைத்த தண்ணீர்)

  • 10 வர மிளகாய்

  • செக்கு கடலை எண்ணெய்

  • உப்பு

Preparation

  • முதலில் பூங்கார் அரிசியை நனைத்து காய வைத்து கொள்ளவும். 

  • அதனுடன் வறுத்த உளுந்தையும் சேர்த்து மாவாக்கிக் கொள்ளவும். 

  • சீரகம், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை இந்த மாவுடன் சேர்க்கவும். 

  • பின் பூங்கார் அரிசி மாவு கலவையை தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும். 

  • பின் முறுக்கு அச்சில் போட்டு செக்கு கடலை எண்ணெயில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.

bottom of page