top of page

பூங்கார் அரிசி பொங்கல்

Prep Time:

5Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

பூங்கார் அரிசியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற சேர்மங்கள் நிறைந்துள்ளன, அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களைத் தடுக்கவும் உதவும். இது உடலில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்தும்

Ingredients

  • பூங்கார் அரிசி- 1கப்

  • பாசிப்பருப்பு 1/2 கப்

  • உப்பு ஒரு சிட்டிகை

  • ஏலக்காய் தூள் சிறிதளவு

  • நெய் தேவையான அளவு

  • தேங்காய் துருவல் 1கப்

Preparation

  • முதல் நாள் இரவு பூங்கார் அரிசியை நன்கு சுத்தமாக கழுவி ஊற வைக்க வேண்டும்.

  • மறுநாள் காலையில் பாசிப்பருப்பை லேசாக வறுத்து, குக்கரில் பாசிப்பருப்பு பூங்கார் அரிசியை போட்டு 4 கப் தண்ணீர் ஊற்றி விசில் விடவும்.

  • பிறகு விசில் அடங்கியதும் அடுப்பில் வைத்து அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு வேக விடவும் உப்பு போடவும்.

  • பொங்கல் பதத்தில் வந்ததும் தேங்காய் துருவல் சேர்த்து தேவையான அளவு நெய்யில் முந்திரி வறுத்து கொட்டவும்.

  • இந்த பொங்கல் அவ்வளவு ருசியாக இருக்கும்.

bottom of page