top of page

பூங்கார் அரிசி புட்டு

Prep Time:

15Minutes

Cook Time:

25Minutes

Serves:

3Servings

Level:

Advanced

About the Recipe

சர்க்கரை நோயால் அவதிப்படுபவர்கள் இந்த பூங்கார் அரிசி உணவாக சாப்பிட்டு வரும்பொழுது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைக்கும் நமது முன்னோர்கள் உடல்நலமானது ஆரோக்கியமாக இருப்பதற்கும் எந்த ஒரு தொற்று நோய்களும் எளிதில் நம்மை அண்டாமல் இருப்பதற்கும் பெரிதளவில் பயன்படுத்தி வந்த அரிசி வகைகளில் இந்த பூங்கார் அரிசி மிகவும் முக்கியமான ஒன்று.

Ingredients

  • பூங்கார் அரிசி - 1 கப்

  • வெல்லம் - 3/4 கப்

  • துருவிய தேங்காய் - 1/4 கப்

  • நெய் - 2 டேபிள் ஸ்பூன்

  • திராட்சை, முந்நிரி, ஏலக்காய் - தலா 4

  • உப்பு - 1 டீஸ்பூன்

Preparation

  • அரிசியை வாணலியில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும் .

  • பிறகு அரிசி மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவிடவும்.

  • அரிசியில் நீரை வடித்து மிக்சியில் அரைக்கவும். நீர் சேர்க்

    க தேவையில்லை.

  • அரைத்த அரிசி பொடியை ஆவியில் 20 நிமிடம் வேகவைக்கவும். பிறகு ஆரவைக்கவும். மாவு உதிரியாக இருக்க வேண்டும்.

  • ஒரு பாத்திரத்தில் வெல்லம் சேர்த்து கால் கப் தண்ணீர் விட்டு கொதிக்க விட வேண்டும். தேங்காய் துருவல் சேர்க்கவும்.

  • நெய்யில் முந்திரி திராட்சை வறுத்து வெல்ல பாகில் சேர்க்கவும்.

  • ஏலக்காய் பொடி சேர்க்கவும்.

  • நன்றாக கலக்கவும். கம்பி பதம் வந்ததும் அரிசி மாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • சிரிதளவு நெய் சேர்த்து இரக்கவும்.

bottom of page