top of page

பூங்கார், கருங்குறுவை அரிசி தோசை

Prep Time:

30 Minutes

Cook Time:

15 Minutes

Serves:

10 Servings

Level:

Intermediate

About the Recipe

மலச்சிக்கலை குணப்படுத்தும்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு சிறந்த மருந்தாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலில் அதிகப்படியான கொழுப்புகளை கரைக்கவும் இந்த அரிசி பயன்படுகிறது.

Ingredients

  • 250 கிராம் கருங்குறுவை அரிசி

  • 250 கிராம் பூங்கார் அரிசி

  • 500 கிராம் இட்லி அரிசி

  • 150 கிராம் முழு உளுந்து

  • தேவையான அளவு உப்பு

  • 1 டீ ஸ்பூன் வெந்தயம்

Preparation

  • உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி வகைகளை நன்கு கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

  • ஊறிய அரிசியை மிகவும் நைசாக இல்லாமல் சற்று கரகரப்பாக அரைத்து வைக்கவும். உளுத்தம்பருப்பை நன்கு கழுவி அரைத்து அரிசி மாவுடன் சேர்த்து உப்பு போட்டு நன்கு கலந்து குறைந்தது 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.

  • பின்னர் மாவைக் கலந்து இட்லி, தோசை, பணியாரம் செய்யலாம். இதற்கு சட்னி வகைகள் காம்பினேஷன் அருமையாக இருக்கும்.

bottom of page