top of page

பாசிப்பருப்பு வெஜ் ஆம்லெட்

Prep Time:

15Minutes

Cook Time:

4Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

நீண்ட நாட்களாக இருந்த வயிற்றுப்புண் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்கு பாசிப்பருப்பு மகத்தான ஒன்றாகும். இதில் இருக்கும் காரத்தன்மையை கட்டுப்படுத்தும் பொருளின் மூலமாக அல்சர் பிரச்சனையால் அவதியுற்ற நபர்கள் குழம்பு வைத்து சாப்பிடலாம்.

Ingredients

  • 100 கிராம் பாசிப்பருப்பு

  • 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு

  • 1 பச்சை மிளாகாய்

  • 1 பெரிய வெங்காயம்

  • 1 கேரட்

  • 5 பீன்ஸ்

  • 2 சிட்டிகை பெருங்காயத்தூள்

  • 50 கிராம் முட்டை கோஸ்

  • 1/2 டேபிள்ஸ்பூன் மஞ்சள்தூள்

  • 1 டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சீரகத்தூள்

  • உப்பு, தண்ணீர், எண்ணெய் தேவையான அளவு

  • ஒரு கொத்து கருவேப்பிலை

Preparation

  • பாசிப் பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

  • அரைத்த கலவையுடன் 2 டேபிள்ஸ்பூன் அரிசி மாவு கலந்து அதனுடன் மிளகு சீரகத்தூள் தேவைக்கேற்ப உப்பு, இரண்டு சிட்டிகை பெருங்காயத்தூள் நறுக்கிய காய்கறிகள் அனைத்தையும் நன்றாக கலந்து சிறிது தண்ணீர் விட்டு15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

  • பின்பு அடுப்பில் தோசைகல்லை வைத்து காய்ந்ததும் நன்கு எண்ணெய் தடவி கலந்து வைத்த கலவையை ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாக வேகவிட்டு எடுத்தால் சுவையான வெஜ் ஆம்லெட் தயார்.

bottom of page