top of page

பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

ஆயுர்வேத மருத்துவத்தில், பித்தம் மற்றும் கபதோஷத்தின் ஏற்றத்தாழ்வு காரணமாக கண்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும். பாசிப்பருப்பில் செய்யப்பட்ட கண் டானிக் இந்த கோளாறுகளை போக்க உதவும் என்று சொல்லப்படுகிறது.

Ingredients

  • 400 கிராம் பீன்ஸ்

  • 1/4 கப் அளவு பாசிப்பருப்பு

  • 2 வெங்காயம்

  • 1/4 கப் அளவு எண்ணெய்

  • 1/2 மூடி துருவிய தேங்காய்

  • 1 ஸ்பூன் கடுகு

  • 10 கருவேப்பிலை

  • 1/2 ஸ்பூன் மிளகாய்தூள்

  • 1/4 ஸ்பூன் மஞ்சள்தூள்

Preparation

  • பீன்ஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இதனை குக்கரில் சேர்த்து கூடவே பாசிப்பருப்பு சேர்த்து அரை டம்ளர் தண்ணீர் விட்டு இரண்டு விசில் வேக வைக்கவும்.

  • ஸ்டவ்வில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.

  • வெங்காயம் வதங்கியதும் வேகவைத்த பீன்ஸ்,பருப்பு, மிளகாய் தூள் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தண்ணீர் வற்றும் வரை சமைக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து ஒரு நிமிடம் அடுப்பில் வைத்து தீயை நிறுத்தவும்.

bottom of page