top of page

பாசிப்பருப்பு பாயாசம்

Prep Time:

20Minutes

Cook Time:

40Minutes

Serves:

12Servings

Level:

Beginner

About the Recipe

குழந்தைகளுக்கு பாசிப்பருப்பை நன்றாக வேக வைத்து, கடைந்து அதனுடன் நெய் சேர்த்து கொடுத்து வந்தால் குழந்தைகளின் நினைவாற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும்.

Ingredients

  • 250 கிராம் பாசிப்பருப்பு

  • தேங்காய் பால் (

    ஒன்றாம் பால், இரண்டாம் பால், மூன்றாம் பால்)

  • ஒரு டீஸ்பூன் ஏலக்காய் பொடி

  • அரை கப் பொடியாக நறுக்கிய தேங்காய்

  • தேவையானஅளவு முந்திரிப் பருப்பு

  • 250 கிராம் வெல்லம்

  • தேவையான அளவு பொரிக்க நெய்

Preparation

  • முதலில் தேங்காயைத் துருவி ஒன்றாம் பால் இரண்டாம் பால் மூன்றாம் பால் பிழிந்து தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.

  • பின்னர் ஒரு கடாயில் சிறிது நெய் விட்டு பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

  • கடாயில் வறுத்த பாசிப் பருப்பை மூன்றாம் பால் சேர்த்து நன்றாக குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  • பின்னர் இரண்டாம் பாலும் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் கொஞ்சம் கெட்டியானதும் ஒன்றாம் பால் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி வைக்கவும்.

  • கடாயில் நெய் விட்டு அதில் பொடியாக நறுக்கிய தேங்காய் முந்திரிப்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.

bottom of page