top of page

பாசிப்பருப்பு சாம்பார்

Prep Time:

10Minutes

Cook Time:

20Minutes

Serves:

7Servings

Level:

Beginner

About the Recipe

கோலிசிஸ்டோகினின் ஹார்மோனின் செயல்பாட்டை மேம்படுத்த பாசிப் பருப்பு உதவுகிறது. இதை சாப்பிட்ட பிறகு உங்களுக்கு பசிக்காது. வயிறு நிரம்பிய எண்ணத்தை ஏற்படுத்தும். வளர்ச்சிதை மாற்றத்தை நிர்வகிக்க உதவுகிறது. மேலும் உங்க எடையை கட்டுக்குள் வைக்க பாசிப் பருப்பு உதவும்.

Ingredients

  • 3/4 கப் பாசி பருப்பு

  • 1/4 கப் எண்ணெய்

  • 4 பச்சை மிளகாய்

  • 3 தக்காளி

  • கடுகு,கறிவேப்பிலை

  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

  • 2 பெரிய வெங்காயம்

  • 1 மேஜை கரண்டி சாம்பார் தூள்

  • தேவையானஅளவு உப்பு, கொத்தமல்லி இலைகள்

Preparation

  • பாசிப்பருப்பை லேசாக வறுத்து குக்கரில் சேர்த்து அளவாக தண்ணீர் சேர்த்து கொஞ்சமாக எண்ணெய் சேர்த்து கூடவே மஞ்சள் தூள் சேர்த்து ஒரு விசில் வேக விட்டு எடுக்கவும்.

  • வடசட்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கருவேப்பிலை கீறிய பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் தூள் மற்றும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கூடவே உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்தபின் வெந்த பாசிப்பருப்பை இதில் ஊற்றி இரண்டு கொதி வந்ததும் நறுக்கிய கொத்தமல்லி இலைகள் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

bottom of page