top of page

பாசிப்பருப்பு சர்க்கரை பொங்கல்

Prep Time:

15Minutes

Cook Time:

30Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

பாசிப்பருப்பை உட்கொள்வது குடலில் ப்யூட்ரேட் எனப்படும் கொழுப்பு அமிலத்தை உருவாக்க உதவுகிறது. இது குடல் சுவர்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இந்த பருப்பில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. வயிற்றில் வாயு உருவாக்கத்தை தடுக்கிறது. உணவை சீரணிக்க உதவுகிறது.

Ingredients

  • 1 கப் பச்சரிசி

  • 1/4 கப் பாசிப்பருப்பு

  • 2 கப் பால்

  • 3 கப் தண்ணீர்

  • 1/2 கப் நெய்

  • 3 கப் பாகு வெல்லம்

  • 1/4 கப் முந்திரி, திராட்சை

  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்

  • ஒரு சிட்டிகை பச்சை கற்பூரம்

Preparation

  • பருப்பை வறுத்து தண்ணீரில் நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.

  • முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து எடுத்து தயாராக வைக்கவும்.

  • பின்னர் பொங்கல் பானையை ஸ்டவ்வில் வைத்து அரிசியை கழுவிய தண்ணீர் சேர்த்து பொங்கும் வரை சூடு செய்யவும். பின்னர் தண்ணீரை வடித்து விட்டு பால், அரிசியில் சேர்த்து கொதிக்க விடவும்.

  • பாதி வெந்தவுடன் பாகு வெல்லம் சேர்த்து கலந்து விடவும்.

  • கொஞ்சம் கெட்டியானதும் நெய் சேர்த்து நன்கு கலந்து விடவும்.

  • மேலும் அரை மணி நேரம் மிதமான சூட்டில் வைத்து வேக வைக்கவும். அவ்வப்போது கலந்து விடவும். அத்துடன் பச்சை கற்பூரம், ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து விடவும்.

  • கடைசியாக வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால் சுவையான பொங்கல் தயார்.

  • பின்னர் எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும். மஞ்சள்,கரும்பு வைத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடவும்.


bottom of page