top of page

பாசிப்பருப்பு கொழுக்கட்டை

Prep Time:

20Minutes

Cook Time:

30Minutes

Serves:

8Servings

Level:

Intermediate

About the Recipe

ஆஸ்டியோ போரோசிஸ் எனும் எலும்பு நோய் உள்ளவர்கள் பாசிப்பருப்பை உணவுடன் எடுத்துக்கொண்டால் நோய் எளிதில் குணமாகும். பாசிப்பருப்பை வேக வைத்து கடுகு, சின்ன வெங்காயம், தாளித்து உப்பு சேர்த்து சப்பாத்திக்குத் தொட்டுக் கொள்ள கூட்டாகவும் உபயோகிக்கலாம். இது மிகவும் சத்தானது.

Ingredients

  • ஒரு கப் பச்சரிசி மாவு

  • ஒரு கப் பாசிப்பருப்பு

  • ஒரு கப் வெல்லம்

  • 3 ஏலக்காய்

  • ஒரு ஸ்பூன் எள்ளு

  • உப்பு தேவையான அளவு

  • அரை கப் தேங்காய்த்துருவல்

Preparation

  • முதலில் பாசிப்பருப்பு வறுத்துக் கொள்ளவும், பிறகு அரை பதத்திற்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

  • வெல்லத்தை தட்டி தூளாக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு எடுத்துக் கொள்ளவும், சிறிது ஆறிய பின் அதை வடிகட்டிக் கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

  • அதில் வேக வைத்த பாசிப்பருப்பு, பொடியாக்கிய ஏலக்காய், தேங்காய் துருவல், எள்ளு, காய்ச்சிய வெல்லப்பாகு, இவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • கலந்த மாவை கையில் எடுத்து கொழுக்கட்டை பிடிக்கவும்.

  • இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேக விடவும்.

  • சுவையான பிடி கொழுக்கட்டை ரெடி.

bottom of page