top of page

பாசிப்பருப்பு கும்பகோணம் கடப்பா

Prep Time:

15Minutes

Cook Time:

15Minutes

Serves:

6Servings

Level:

Intermediate

About the Recipe

பாசிப்பருப்பு குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொண்டுள்ளது. இது உடலில் உள்ள இன்சுலின், இரத்த குளுக்கோஸ் மற்றும் கொழுப்பு அளவைக் குறைக்க உதவுகிறது.இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது, மேலும் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Ingredients

  • 1 கப் பாசிப்பருப்பு

  • 1 உருளைக்கிழங்கு


    அரைக்க

  • 4 ஸ்பூன் தேங்காய் துருவல்

  • 1 ஸ்பூன் பொட்டுக்கடலை

  • 4 பல் பூண்டு

  • 1 ஸ்பூன் சோம்பு, கசகசா


    தாளிக்க

  • 1/4 கப் எண்ணெய்

  • 1 ஸ்பூன் கடுகு, சீரகம் பெருங்காயத்தூள்

  • 2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது

  • 2 தக்காளி பொடியாக நறுக்கியது

  • 4 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கவும்

  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்

  • தேவையான அளவு உப்பு

  • சிறிது கறிவேப்பிலை கொத்தமல்லி தழை

Preparation

  • பாசிப்பருப்பு வறுத்து 3 விசில் வந்ததும் இறக்கவும்.உருளைக்கிழங்கு சேர்த்து வேக வைக்கவும்.

  • வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு சீரகம் பெருங்காயத்தூள் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

  • பின்னர் மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேக வைத்துள்ள பாசிப்பருப்பு சேர்த்து கலக்கவும்

  • தேங்காய், பொட்டுக்கடலை கசகசா சோம்பு சேர்த்து நன்கு அரைத்து சேர்த்து வதக்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்

  • கொத்தமல்லி தழை சிறிது சேர்த்து பரிமாறவும் சுவையான கடப்பா தயார்

bottom of page