top of page

பாசிப்பருப்பு அரிசி உசிலி

Prep Time:

3Minutes

Cook Time:

20Minutes

Serves:

6Servings

Level:

Beginner

About the Recipe

உடல் சூட்டை குறைப்பதில் பாசிப் பருப்பு தண்ணீரை விட மிகவும் நன்மை பயக்கும் என்று சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இதில் வைடெக்சின் மற்றும் ஐசோவிடெக்சின் எனும் இரண்டு ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. அவை அதிக வெப்பநிலையிலிருந்து உடல் செல்களைப் பாதுகாக்க உதவுகின்றன.

Ingredients

  • 1கப் பச்சை அரிசி

  • 1/4கப் பாசிப்பருப்பு

  • 4 to 5 வறமிளகாய்

  • 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்

  • 1ஸ்பூன் நெய்

  • 1ஸ்பூன் கடுகு

  • 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு

  • 1ஸ்பூன் கடலைப்பருப்பு

  • கருவேப்பிலை சிறிதளவு

Preparation

  • பச்சை அரிசியை வெறும் வாணலியில் நன்கு வறுத்துக் கொள்ளவும். அதேபோல் தனியாக பாசிப்பயறை சிவக்க வறுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக தண்ணீரில் கழுவி 15 நிமிடம் வரை ஊற வைக்கவும். ஊற வைக்காமலும் செய்யலாம்.

  • ஒரு அடி கனமான வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்தவுடன் அதில் ஒரு ஸ்பூன் கடுகு,உளுத்தம் பருப்பு,கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்ளவும். சிவந்தவுடன் 4 அல்லது 5 வரமிளகாயை கிள்ளி சேர்க்கவும். மிளகாய் சிவந்தவுடன் ஒன்றுக்கு மூன்றரை அல்லது நான்கு டம்ளர் தண்ணீர் சேர்க்கவும். 4 டம்ளர் தண்ணீர் சேர்த்தால் கொஞ்சம் குழய வேகும். தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளவும்.

  • தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் கழுவி வைத்த அரிசி பருப்பை சேர்த்துக் 20 நிமிடம் வேக வைக்கவும். நடுவில் இரண்டு முறை திறந்து நன்கு கிளறி விடவும். அரிசி நன்கு வெந்தவுடன் உசிலி தயாராகிவிடும்.

  • இதற்கு தொட்டுக்கொள்ள பச்சை புளி சுவையாக இருக்கும் அல்லது பொட்டு கடலை தேங்காய் சட்னி தொட்டுக் கொள்ளலாம். சர்க்கரை கூட தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

bottom of page