top of page

பாசிப்பயிறு மசியல்

Prep Time:

5Minutes

Cook Time:

15Minutes

Serves:

3Servings

Level:

Beginner

About the Recipe

மஞ்சள் அல்லது பச்சை பருப்பில் பொட்டாசியம் மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தசைப்பிடிப்பில் இருந்து உங்களை காக்கும். ஒழுங்கற்ற இதயத்துடிப்பில் இருந்து உடலை பாதுகாக்கிறது. இது எளிதில் சீரணிக்க கூடியது என்பதால் உயர் இரத்த அழுத்தத்தில் உள்ளவர்கள் இதை சாப்பிடுவது நல்லது.

Ingredients

  • 50 கிராம் பாசிப்பயிறு

  • 1 பெரிய வெங்காயம்

  • 2 தக்காளி

  • 50 ml எண்ணெய்

  • 1 டீஸ்பூன் சீரகம்

  • 1 டீஸ்பூன் முழு கொத்தமல்லி

  • 1 கொத்து கருவேப்பிலை

  • 2 வர மிளகாய்

  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • 8 பல் பூண்டு

  • 4 பச்சை மிளகாய்

  • 2 டீஸ்பூன் உப்பு

Preparation

  • ஒரு குக்கரில் பாசிப்பயிரை கழுவி அதில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் பூண்டு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து 4 விசில் விட்டு வேக வைக்கவும்

  • வெந்தவுடன் ஒரு மத்தை வைத்து நன்றாக கலந்து கொள்ளவும்

  • இப்போது தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் சேர்த்து அதை சூடான பிறகு அதை சீரகம் முழு கொத்தமல்லி வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் தாளித்து அதில் போட்டு கிளறி விடவும். இப்போது உப்பு சேர்த்து பரிமாறவும்

bottom of page