top of page

பனங்கற்கண்டு சினமன்ரோல்

Prep Time:

20 Minutes

Cook Time:

40 Minutes

Serves:

4 Servings

Level:

Advanced

About the Recipe

பாலில் பனங்கற்கண்டை சேர்த்து காய்ச்சி குடித்தால் மார்புச்சளி இளகும்.
முக்கியமாக தொண்டைப்புண் வலி அகலும். பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், நீர்சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பங்கள் இவற்றுக்கு நல்லது.
பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் பலவிதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக உள்ளது.

Ingredients

  • 2 கப் மைதாமாவு

  • 1 கப் தயிர்

  • 1 ஸ்பூன் சீனி

  • ¼ ஸ்பூன் உப்பு

  • 1 ஸ்பூன் பேக்கிங் பவுடர்

  • 1/2 ஸ்பூன் பேக்கிங் சோடா

  • 4 ஸ்பூன் வெண்ணை

  • ஒரு ஸ்பூன் பட்டைதூள்

  • ½ கப் பனங்கற்கண்டு

Preparation

  • ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா, உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து பின் தயிர் சேர்த்து பிசைந்து 10 நிமிடம் வைத்துக் கொள்வோம்.

  • பனங்கற்கண்டை தூளாக்கி எடுத்துக் கொள்வோம். அதில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் வெண்ணெய் மற்றும் பட்டைதூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்வோம்.

  • மாவை நன்கு பிசைந்து அதில் ஒரு பெரிய உருண்டையை எடுத்து செவ்வக வடிவில் உருட்டி புத்தகம் போல் இடது புறத்திலிருந்தும் வலதுபுறத்தில் இருந்தும் மடித்து துண்டுகளாக தயார் செய்து வைத்து அதனை தட்டின் மீது வைத்துக் கொள்வோம்.

  • அடி அகன்ற பாத்திரத்தில் உப்பைப் போட்டு அடுப்பில் வைத்து 10 நிமிடம் பிரீ ஹிட் செய்துகொள்வோம். ஸ்டாண்டை உப்பின் மீது வைத்து அதன்மீது தயார் செய்த தட்டை வைத்து மூடி 15 அல்லது 20 நிமிடம் வேகவிட்டு எடுத்தால் மீண்டும் மீண்டும் சுவைக்கத் தூண்டும் சினமன் ரோல் தயார்.

bottom of page