top of page

பனங்கருப்பட்டி கடலை உருண்டை

Prep Time:

5 Minutes

Cook Time:

35 Minutes

Serves:

4 Servings

Level:

Intermediate

About the Recipe

இதயத்தை பாதுகாக்க தேவையான பொட்டாசியம் சத்து கருப்பட்டியில் உண்டு.
இவை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு ரத்த அழுத்ததையும் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனால் இதய கோளாறுகள் வராமல் தடுக்கப்படுகிறது.

Ingredients

  • 1 கப் வறுத்த நிலக்கடலை

  • 1/2 கப் பனங்கருப்பட்டி

  • 1/4 கப் நாட்டுச்சக்கரை


  • முந்திரி திராட்சை

  • நெய்

Preparation

  • நிலக்கடலையை நன்கு வறுத்து தோல் நீக்கி

    மிக்ஸியில் அதை கொரகொரப்பாக அரைத்து

    அதனுடன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து ஒரு பல்சில் அரைத்துக் கொள்ளவும்.

  • ஒரு பாத்திரத்தில் கருப்பட்டியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும் அதை வடித்து மீண்டும் கொதிக்க விடவும்.

  • கருப்பட்டி கையில் ஒட்டும் பதத்துக்கு இருந்தால் போதும்.

  • ஒரு கடாயில் நெய் விட்டு அதில் முந்திரி திராட்சை அனைத்தும் பொன் நிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும்.

  • அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும். அத்துடன் முந்திரி திராட்சையை சேர்த்து கலந்து கொள்ளவும்.

  • கருப்பட்டிப்பாகை சிறிது சிறிதாக அந்தக் கலவையில் விட்டு உருண்டை பிடிக்கும் பக்குவம் வரும் வரையில் கிளறிக் கொள்ளவும்.

  • இனி சிறுசிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளலாம்.

bottom of page