top of page

பச்சை பயிறு குழம்பு(கிரேவி)

Prep Time:

10Minutes

Cook Time:

15Minutes

Serves:

4Servings

Level:

Beginner

About the Recipe

பச்சை பயிறு சாப்பிட்டு வந்தால் கோடை காலங்களில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.

Ingredients

  • 100 கிராம் முளைகட்டிய பச்சை பயறு

  • 2 தக்காளி

  • 1 பெரிய வெங்காயம்

  • 1 பச்சை மிளகாய்

  • 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்

  • 1/2 டீஸ்பூன் தனியாத்தூள்

  • 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது

  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்

  • பட்டை,சோம்பு,கிராம்பு சிறிதளவு

  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்

  • உப்பு தேவையான அளவு

Preparation

  • வெங்காயம்,தக்காளி, பச்சை மிளகாய் கட் பண்ணிக் கொள்ளவும்

  • குக்கரை அடுப்பிலேற்றி சூடானதும் எண்ணெய் ஊற்றி சோம்பு, பட்டை, கிராம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயம் போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது, தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி தனியாத்தூள் மிளகாய்த்தூள் மஞ்சள்தூள், உப்பு ,முளைகட்டிய பாசிப்பயறு போட்டு இரண்டு புரட்டு புரட்டி இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 விசில் வரும்வரை வேகவிடவும்,

  • குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து கொத்தமல்லி தழை தூவி கரண்டியால் கலந்து விடவும். சத்தான சுவையான பாசிப்பயறு கிரேவி தயார்.

bottom of page